சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம்: களத்திற்கு சென்ற டக்ளஸ்

-யாழ் நிருபர்-

சாவகச்சேரி பிரதேச சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை வழங்குவதில் பிரதேச செயலகம் மற்றும் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் இழுபறி நிலமைக்கு தீர்வுகாணும் வகையில் குறித்த அமைவிடத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பொது மக்களுக்கு ஓர் இலகுவான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலும் குறித்த பிரச்சினைக்கு தீர்வை மையப்படுத்தியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த நேரடி கள விஜயம் இடம்பெற்றது.

இந்த விஜயத்தில் யாழ் அரச அதிபர் பிரதீபன் , மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளர் சத்தியசோதி,கூட்டுறவு ஆசையாளர் தேவனந்தினி பாபு, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் , நகர மற்றும் பிரதேச சபை செயலாளர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்