
சாமர சம்பத் நீதிமன்றில் ஆஜர்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று திங்கட்கிழமை காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவரை தொடர்ந்து எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த முதலாம் திகதி உத்தரவிட்டது.
குறித்த உத்தரவை கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி பிறப்பித்திருந்தநிலையில், இன்று அவர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.