சாதாரண தர பரீட்சை எழுதிகொண்டிருக்கும் போது மாணவர் மீது தாக்குதல்

மாத்தளை மாவட்டம் ரத்கம பிரதேசத்தில் பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் ரத்கம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்கம, தெவினிகொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீதே ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த போதிலும் தொடர்ந்து பரீட்சை எழுதியதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்