சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி அறிவிப்பு

2023ஆம் ஆண்டு இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகி 15ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்