சல்மான் கானின் வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் கைது

மும்பையின் பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் குஜராத்தின் பூஜ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்