சர்வதேச விசாரணை அவசியம்: காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்பு கோரிக்கை

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணைகள் அவசியம் என மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 5 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், முன்னால் காத்தான்குடி நகர சபை தவிசாளரும் காத்தான்குடி தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய தலைவருமான யு.எல்.எம்.என் முபின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் முஸ்லீம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாவும் தங்களுடைய சமூக மக்களுடைய வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டதுடன் அரசியல் தலைவர்களை பதவிகளில் இருந்து விலக்குவதற்கு சூழ்ச்சிகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கவிதைகளை எழுதியவர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டம் பிரயோகிக்கப்பட்டதாகவும் முஸ்லீம் வைத்தியர்கள் மீது பழிகள் சுமத்தப்பட்டு தாங்கள் உள உடல் ரீதியான துன்பங்களை அனுபவித்ததுடன் இவற்றுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் சனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என கூறப்பட்டது.

மேலும் இலங்கையில் நீதி துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையும் நீதி துறைக்கு சுதந்திரம் இல்லை என்பதும் பல்வேறு புத்திஜிவிகளால் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு என்றும் இந்த தாக்குதல் தொடர்பில் இரண்டு ஜனபதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டும் அதற்கு என்ன நடந்தது என்பது இதுவரை அறியப்படவில்லை போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் அண்மையில் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிதுறையை பற்றி விமர்சனங்கள் எழுந்ததாகவும்  கூறப்பட்டது.

எனவே இவற்றிற்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச விசாரணைகளே ஒரே வழி என தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் முகைதீன் சலி (Muhaideen sali) சட்ட ஆலோசகர். ஏ.எல்.எம் சரிப்தீன் (A.l.m.shareefdeen) ஓய்வு பெற்ற உதவி திட்ட பணிப்பாளர், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்