கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய் கிழமை திகதி இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் கண்கவர் தீபநாட்டியம், நடனம்,மகளிர் சிறப்புரை, பட்டிமன்ற பேச்சு, வில்லுப்பாட்டு என கலை நிகழ்வுகள் பல இடம் பெற்றது.

இதன் போது மாவட்ட அரசாங்க அதிபரை கெளரவித்து இப் பிரதேச பெண் தொழில் முயற்ச்சியாளர்களையும் கெளரவித்து சான்றிதழ்கள் வழங்கியமை சிறப்பம்சமாகும்.

இந் நிகழ்வில் கணக்காளர் ஜே.ஜேர்ச் ஆனந்தராஜா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் , நிருவாக உத்தியோகத்தர் திருமதி. புனிதநாயகி ஜேயக்குமார் என பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்