கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதி முறை இரத்து

கோதுமை மா இறக்குமதிக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த அனுமதி முறை நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியும் கிலோ கிராம் ஒன்றுக்கு 16 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதுடன்இ கோதுமை தானியங்களுக்கு 6 ரூபா வரியும் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார். எனினும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், கோதுமை மா மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்