கொழும்பு-முகத்துவாரம் துப்பாக்கிச் சூடு : மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேதவத்தை – கலுபாலம பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த, சோதனை போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள், கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்