கொழும்பின் சில வீதிகளை மூட தீர்மானம்

நாட்டில் நிலவும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் இன்று சனிக்கிழமை நள்ளிரவு மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தவ தெரிவிக்கின்றார்.

இதன்படி, கொழும்பு நகரின் பிரேக்புறுக் பிளேஷ், பொரள்ளை கனத்தை சுற்றுவட்டம் முதல் தும்முல்லை சந்தி, பௌத்தாலோக்க மாவத்தை, சேர் லேஸ்டர் ஜேம்ஸ் சுற்றுவட்டம் முதல் ரொடுன்டா சுற்றுவட்டம் வரையான வீதி மூடப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்