கொலையில் முடிந்த கணவன் மனைவிக்கிடையிலான வாக்குவாதம்
கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்று கத்திக்குத்தில் முடிந்து சம்பவத்தில் கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் Guyancourt (Yvelines) நகரில் இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடொன்றில் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு 36 வயதுடைய ஆண் ஒருவர் கழுத்துப்பகுதியில் கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
இத்தாக்குதலை மேற்கொண்டது 34 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது, அதனைத்தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டார்
தம்பதிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து, கணவர் தாக்க வந்ததாகவும், தற்பாதுகாப்புக்கான தான் அவரை திருப்பி தாக்கியதாகவும் கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தம்பதிகளின் பிள்ளைகள் இருவர் மீட்கப்பட்டு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்