
கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பின் அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உயரமான கட்டடங்களில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்து இருந்ததைக் காண முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியாவில் உள்ள மெட்ல்லின் மற்றும் காலி உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை உணர முடிந்தது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்