கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று வியாழக்கிழமை மீண்டும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 6 பேரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்