கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தொடம்பே பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி, தொடம்பே பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் அவரது உறவினரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் சந்தேக நபரான உறவினரால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்