கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி வியாபாரி கொலை

குருணாகல், ரிதிகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல், ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய கோழி இறைச்சி வியாபாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் குருணாகல், ரிதிகம பிரதேசத்தில் உள்ள காணியொன்றிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்