-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை வீடு ஒன்றை சேதப்படுத்தியுள்ளது.
ஊருக்குள் நுழைந்த காட்டு யானை இரவு 11 மணியளவில் வீட்டை தாக்கியதில் பலத்த சேதம் வீட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இரவு நேரத்தில் தனது பிள்ளையுடன் தூங்கி கொண்டிருக்கும் போது குறித்த யானை தாக்குதல் இடம் பெற்றதாகவும் இதனால் வீடு மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டு தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பகுதியில் அடிக்கடி யானை தொல்லை ஏற்படுவதனால் அப் பிரதேச மக்கள் நிம்மதியாக தூங்க முடியாது தவிர்க்கின்றனர். பாதுகாப்பான யானை வேலி இன்மையால் யானை தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்