கிட்னி செயலிழப்பு அறிகுறிகள்

கிட்னி செயலிழப்பு அறிகுறிகள்

கிட்னி செயலிழப்பு அறிகுறிகள்

📍சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்ட இயலாமல் போகும் நிலையே சிறுநீரக செயலிழப்பு ஆகும். இந்நிலையில் சிறுநீரகங்கள் வடிகட்டும் செயலை செய்ய முடியாமல் போவதால் கழிவுகளின் சேர்க்கை அதிகரித்து இரத்தத்தின் கெமிக்கல்கள் சமநிலையை இழந்து ஆபத்தை உண்டாக்குகிறது.

📍சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப காலத்தில் கண்டறிவது சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகளும்இ மற்ற வியாதிகளுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி இருப்பதால்இ இதனை ஆரம்ப கட்டத்தில் அறிந்துகொள்வது சற்று கடினமாக உள்ளது. சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு இருந்தால் இ என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

கிட்னி செயலிழப்பு அறிகுறிகள்
  1. சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் தோய்வு ஏற்படும்போது உடலின் நச்சுக்கள் மற்றும் அசுத்தங்கள் இருப்பின் அது சுத்தீகரிக்கப்படாமல் இரத்தத்தில் கலந்துவிடும். இதனால் அனீமியா ஏற்பட்டு நீங்கள் எப்போதும் அதீத சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்வீர்கள். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
  2. ஒருவருக்கு சிறுநீரக செயலிழப்பு பிரச்சனை இருந்தால், அவர் மூச்சு விடும் போது, ஒருவித துர்நாற்றம் வெளியேறுவதை கவனிக்க முடியும். சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது , ரத்தத்தில் யூரியா என்ற நச்சுபொருள் அதிகமாக இருக்கும். இது வாயிலுள்ள உமிழ் நீருடன் சேர்ந்து, அமோனியாவாக மாற்றம் அடைந்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
  3. பொதுவாக, சிறுநீரகங்கள் பாதிப்படையும் போது, இரத்த சோகை உருவாகும். ஏனெனில், புதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தி ஆவதற்கும், சிவப்பு அணுக்களின் செல்களில் ஆக்சிஜனேற்றம் சீராக நடைபெறுவதற்கும், எரித்ரோபொய்டின்(Erythropoietin) என்ற ஹார்மோன் முக்கிய பங்களிக்கிறது. சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது இந்த ஹார்மோன்களின் உற்பத்தியும் குறைந்து விடும்.
  4.  நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்கள் அதுவும் இரவில் அதிகமாக சிறுநீர் கழிக்க தோன்றுகிறது எனில் அது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகும். அதாவது சிறுநீரகத்தின் வடிகட்டும் செயல் தடைப்படும்போது அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு தோன்றும். சில நேரங்களில் சிறுநீரக தொற்று ஏற்பட்டிருதாலும் இவ்வாறு தோன்றும்.
  5. நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது நுரைத்து வருகிறது எனில் அதில் புரோட்டீன் கலந்திருக்கிறது என்று அர்த்தம். இது கிட்டத்தட்ட முட்டையை ஸ்கிராம்பிளிங் செய்த தோற்றத்தில் இருக்கும். காரணம் சிறுநீரில் வரும் அந்த புரோட்டீன் நுரையானது முட்டையிலும் காணப்படுகிறது.
  6. பசியின்மை
  7. சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறையும்போது எலக்ட்ரோலைட்ஸ் சமநிலை இழக்கும். இதனால் கால்சியம் குறையும் மற்றும் போஸ்போரஸ் கட்டுப்பாடு குறையும். இதன் காரணமாக தசைப்பிடிப்பு அடிக்கடி ஏற்படும்.
  8. முகம் வீங்குதல் மற்றும் கை, கால் வீக்கங்கள் இவை சிறுநீரகம் செயலிழப்பால் ஏற்படும். சிறுநீரகங்கள் செயலிழப்பால் சிறுநீர் சரியான முறையில் வெளியேறாத காரணத்தால் இவை ஏற்படும்.
  9. நுரை பொங்கி சிறுநீரகத்தில் புரோட்டீன் வெளியேறுவது சிறுநீரக பாதிப்பின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கிறது. அப்படி உங்கள் சிறுநீரகம் அதிக அளவிலான புரோட்டீனை வெளியேற்றுகிறது எனில் அதன் அறிகுறியாக கண்களை சுற்று வீங்கியதுபோல் இருக்கும்
  10. சிறுநீரகங்கள் அமைத்து இருக்கக் கூடிய, இடத்திற்கு மேல்புறமோ, அல்லது முதுகின் அடிப்பகுதியிலோ ஒரே இடத்தில தொடர்ந்து வலி இருந்தால், அது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.

கிட்னி செயலிழப்பு அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்