கால்வாயில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள்: மாணவன் பலி

குருநாகல் கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலேகடவல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.சாமோத் வசல (வயது – 17) என்ற பாடசாலை மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பலேகடவலயிலிருந்து கல்கமுவ நகரை நோக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் ரயில் பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவருமே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.

இவ்வாறு விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் அப்பகுதியிலுள்ள வீடுகளில் உதவி கோரியுள்ளார். அதன்பின்னர் அவ்விடத்தை அடைந்த மக்கள் ஓடையில் விழுந்தவர்களை 1919 அம்புயூலன்ஸ் சேவைக்கு அறிவித்து கல்கமுவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார். மற்றைய இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒரு மாணவன் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்