காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவருக்கு 62000 தண்டப் பணம்

 

சாவகச்சேரி நகரசபை பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் குணசாந்தன் தலைமையில் பொது சுகாதார பயிலுநர்கள் அடங்கிய குழுவினரால் கடந்த 20 ஆம் திகதி சாவகச்சேரி நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வியாபார நிலையங்கள் மீதான திடீர் பரிசோதனையின் போது காலாவதியான பிஸ்கட், சோடா என்பவற்றையும், பழைய கடலையையும் விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்தவர் வசமாக சிக்கிக் கொண்டார்.

குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்இ வியாபார நிலைய உரிமையாளரை கைதுசெய்து பிணையில் விடுவித்ததுடன், அவருக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து 62,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கடுமையாக எச்சரிக்கையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்