காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் மே 19ஆம் திகதி இந்த கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த சேவையில் ஈடுபடும் கப்பலுக்கு சட்டரீதியான அனுமதி கிடைக்காமை மற்றும் நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து பிற்போடப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து இரண்டு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியுடன் குறித்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்