கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள்

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள்

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள்

⭕நமது உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். இது கழிவுகளை வெளியேற்றவும், உணவை ஜீரணிக்கவும், ரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களின் உற்பத்தியையும் செய்வதுடன் ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பல வகையான வேலைகளை செய்கிறது. எனவே இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் உடலில் ஏற்படும் 90 சதவீத நோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தான் காரணமாகின்றன.

⭕உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல், உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

⭕இத்தகைய கல்லீரல் மாறிவரும் உணவு பழக்கம், கட்டுப்பாடு இல்லாத குடி பழக்கம், மரபியல் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரலில் நீர் கோர்ப்பது, கல்லீரலில் கொழுப்பு கட்டிகள், கல்லீரலில் கிருமிகள் தாக்குவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கல்லீரல் சுமார் 70% பாதிப்பு அடையும் வரை எந்த ஒரு அறிகுறிகளையும் காட்டாது. இதன் காரணமாகவே கல்லீரல் சார்ந்த நோய்களை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

🔺கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

🔺கல்லீரல் பாதிப்படையும் பொழுது உடல் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகக்கூடிய கழிவுகள் மற்றும் கல்லீரலில் உண்டாகக்கூடிய பித்த உப்புகள் உடலிலேயே தேங்க ஆரம்பித்துவிடும். இதன் விளைவாக சருமத்தில் தடிப்பு, சரும அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற அறிகுறிகள், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

🔺மஞ்சள் காமாலை, கண் வெள்ளை மற்றும் தோலின் மஞ்சள் நிறமாகவும் அறியப்படுகிறது, இது கல்லீரல் பாதிப்பின் மிகத் தெளிவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

🔺கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்

🔺கல்லீரல் சேதத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்று மஞ்சள் காமாலை ஆகும், இது தோல் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தின் மஞ்சள் நிறமாகும். கல்லீரல் பெரிதாகி, அசௌகரியம் மற்றும் நிறைவான உணர்வை ஏற்படுத்தும்.

🔺கல்லீரல் உணவு செரிமானத்திற்கு தேவையான பையில் என்னும் பித்த நீரை சுரக்கின்றது. கல்லீரல் பாதிப்படையும்பொழுது அளவுக்கு அதிகமான பித்தநீர் சுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த பித்த நீர் மிகவும் கசப்பு சுவையுடையது, இந்த பித்த நீர் செரிமான உறுப்புகளில் அதிகம் தேங்கி இருக்கும்பொழுது வாய் கசப்பு தன்மையாக இருக்கும். இவ்வாறு வாய் கசப்பு தன்மையானது மாதக்கணக்கில் இருந்தால் தாங்கள் கட்டாயமாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

🔺கண்கள் அதிக வறட்சியாகவோ அல்லது வாய் வறட்சியாகவோ இருந்தால் அவை பல பாதிப்புகளை நமக்கு தருகின்றது. கண்ணில் இது போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கு கல்லீரல் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாகும்.

🔺கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

🔺கல்லீரலின் செயலிழப்பு, இருண்ட சிறுநீரை ஏற்படுத்தும், இது உடலில் பிலிரூபின் அதிகமாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். இது சிறுநீருக்கு இருண்ட, பழுப்பு நிறத்தை அளிக்கும்.

🔺இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டுவதில் கல்லீரல் பங்கு வகிக்கிறது. இது சரியாக செயல்படவில்லை என்றால், நச்சுகள் உருவாகி மூளையை பாதிக்கலாம், குழப்பம் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்