கருப்பு உளுந்து பயன்கள்

கருப்பு உளுந்து பயன்கள்

கருப்பு உளுந்து பயன்கள்

🎈நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் குழம்புஇ கூட்டு போன்றவற்றுக்கு பல வகையான பருப்புகளை பயன்படுத்துகின்றோம். அவற்றில் உடலுக்கு பல நன்மைகளைத் தரும் பருப்பு வகையாக உளுந்து இருக்கிறது. அந்த உளுந்தில் வெள்ளை உளுந்துஇ கருப்பு உளுந்து என இருவகை இருக்கின்றன. இதில் கருப்பு உளுந்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

◼நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தினமும் அல்லது சரியான அளவில் கருப்பு உளுந்தினை எடுத்து கொள்வதின் மூலம் இரத்தத்தில் இன்சுலின் மற்றும் குளுக்கோஸின் அளவை சமப்படுத்த முடியும். இதனால் நோயின் தாக்கமும் குறையும் வாய்ப்புள்ளது.

◼ கருப்பு உளுந்தில், கால்சியம்,  பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளதால் உடலில் உள்ள எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலிமை  அதிகரிக்கும்.

◼கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது.

◼கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்துவதற்கும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

◼கருப்பு உளுந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும் சத்துக்கள் நிறைந்த உணவாகும். எனவே, கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதன் மூலமாக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

◼எதிர்பாராத விதமாக அடிபடுதல், விபத்து போன்றவற்றில் உடலில் காயங்கள், புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. சமயங்களில், உள்காயங்களும் உண்டாக்கிவிடுகின்றன. இத்தகைய பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் அடிபட்ட இடத்தில் பிராணவாயு அதிகம் கிரகிக்க செய்து புண்களையும், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.

◼சருமம் சம்பந்தமான பிரச்சனைகளைப் போக்க கருப்பு உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம். வெயிலின் தாக்கத்தை தணிக்கவும், முகப்பரு அறிகுறிகளைக் குறைக்கவும் கருப்பு உளுந்தை அடிக்கடி சாப்பிடலாம்.

◼கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

◼கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுவதால் நமது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

◼கருப்பு உளுந்து அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் உற்சாகம் அடைந்து, சக்தி அதிகரித்து நீண்ட நேரம் செயலாற்றக் கூடிய ஆற்றல் கிடைக்கும்.

கருப்பு உளுந்து பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்