கருப்பு உலர் திராட்சை பயன்கள்

கருப்பு உலர் திராட்சை பயன்கள்

கருப்பு உலர் திராட்சை பயன்கள்

💦கருப்பு நிற திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் கருப்பு உலர் திராட்சை. நாம் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். அப்படி ஒரு உணவு பொருள் தான் கருப்பு உலர் திராட்சை. இந்த கருப்பு உலர் திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. எவ்வாறான நன்மைகள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

உலர் திராட்சையின் பயன்கள்

◼கருப்பு உலர் திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள்இ அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

◼உலர்திராட்சையில் கனிசமான அளவு இரும்பு சத்து உள்ளது. எனவே தினமும் உலர் திராட்சை உட்கொல்வதன் மூலம் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.

◼உலர் கருப்பு உலர் திராட்சைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

◼உலர் திராட்சைகள் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்தவை மேலும் அதிக கலோரிகள் உட்கொள்ளலில் சேர்க்காமல் உடல் பசியைக் கட்டுப்படுத்த உதவும் தன்மையுடையது. இதன் மூலம் நீண்ட நேரம் பசியைக் குறைத்து உடல் எடை குறைப்பதில் உதவுகிறது. திராட்சையில் உள்ள இயற்கையான பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிக அளவு ஆற்றலை வழங்க உதவுகிறது. மிதமான அளவில் சாப்பிட்டால், அவை பலவீனம் மற்றும் எடை அதிகரிப்பைத் தடுக்க உதவுகின்றன.

◼ஊறவைத்த திராட்சைகளில் பாலிஃபீனால்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்கள் என்ற ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் இருப்பதால் இது கண்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமின்றி கண்புரை மற்றும் கண்கள் தொடர்பான உபாதைகள் வராமல் தடுக்கிறது.

◼கருப்பு உலர் திராட்சையில் பாஸ்பரஸ் மற்றும் போரான் கால்சியம் போன்ற கனிமச்சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இந்த கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் கை மற்றும் கால் வலி போன்ற எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

◼உலர் திராட்சையை நீரில் ஊறு வைத்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள அத்தியாவசியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக இரத்த ஓட்டம் மேம்படும், கல்லீரல் சுத்தமாகும், சருமம் சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

◼தினமும் கருப்பு நிற உலர்திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், அது தலைமுடிக்கு வேண்டிய சத்துக்களை அளித்து, தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

◼கருப்பு உலர் திராட்சையில் வைட்டமின் B  மற்றும் வைட்டமின் C அதிகம் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த கருப்பு உலர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இது தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைகிறது.

◼ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

◼பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

◼ஒரு கப் நீரில் 20-25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

கருப்பு உலர் திராட்சை பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்