கம்பியால் தாக்கிய கணவன்: கண்களில் மிளகாய் பொடி தூவிய மனைவி

கொழும்பு வெல்லவ பிரதேசத்தில் கணவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தல்விட பிரதேசத்தை சேர்ந்த எஸ். பிரதீப் குமார (வயது – 38) என்பவரே உயிரிழந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட மனைவி 36 வயதுடைய ஆடை தொழிற்சாலை ஊழியர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கணவர் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் உயிரிழந்த நபர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இவரது தாக்குதலில் இருந்து தப்பிக்க மனைவி கணவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து மனைவி கைது செய்யப்பட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்