கனடா அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு கோடியே 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இ பண மோசடியில் ஈடுபட்ட நிலையில்  வெளிநாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையே செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட கால பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில்  தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட நபர் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சொகுசு பேருந்தில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்மணி பகுதியில் பேருந்தினை மறித்து சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கைதான நபர் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்