கண் மற்றும் கால் வலி: குடும்பஸ்தரின் தவறான முடிவு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிரை மாய்த்துள்ளார்.

கல்வியங்காடு பகுதியை சேர்ந்த கோபால் புஸ்பராசா (வயது – 65) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் சில காலங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நிலையில் இரண்டு கால்களிலும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கண் வலியும் இவருக்கு இருந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு வலிகளும் தாங்க முடியாத நிலையில் அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை வழியில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.