3 வருடங்களாக கணவரின் நண்பர்கள் செய்த கொடூரம்: பெண் பரபரப்பு புகார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட்டைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானவர். அப்பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

பெண்ணின் கணவர், சவுதியில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக உள்ள நிலையில்,

தனது கணவரின் நண்பர்களால் கடந்த 3 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், என்னை பாலியல் வன்கொடுமை செய்ததை என்னுடைய கணவரின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோவை என் கணவருக்கும் அனுப்பி உள்ளனர்.

மேலும், இது பற்றி என் கணவரிடம் நான் கேட்ட போது, அவர் அவர்களிடம் இருந்து நான் பணம் பெற்றுக் கொண்டேன், என்னை அமைதியாக இருக்கும்படி கூறினார்கள் என்று என்னிடம் கூறினார் .

இதனை நான் வெளியே சொன்னால், எனது கணவர் என்னை விவாகரத்து செய்து விடுவேன் எனக் கூறி மிரட்டுவார்.

என்னுடைய குழந்தைகள் நலன் கருதியும், குடும்ப கௌரவத்தைக் கருதில் கொண்டும் நான் இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் “இனியும் அப்படி இருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்