கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

-பதுளை நிருபர்-

பதுளையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பொலிஸாரினால் கைது‌செய்யப்பட்டுள்ளார்.

தெல்பெத்த பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிபான துன்ஹிடபதன காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கசிப்பு மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 780,000 மில்லி லிட்டர் கோட மற்றும் 6 பரல்கள் டங்கர ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்