ஐ.பி.எல் 2024 : இன்றைய போட்டியில் களமிறங்குகிறார் யாழ் மைந்தன் வியாஸ் காந்த்

இந்தியன் பிறீமியர் லீக் 2024 தொடரின் இன்றைய 57 ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சுப்பர் ஜெயண்டஸ் அணியும் மோதுகின்றன.

இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் இடம்பெறுகின்றது.

இன்றை ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 11 பேர் கொண்ட பெயர் பட்டியலில் வியாஸ் காந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வியாஸ்காந்த இன்று தனது முதலாவது ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் தடவையாக யாழைச் சேர்ந்த வீரர் ஒருவர் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்