🟢சர்வதேச அளவில், ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட பொருளாக விளங்குகிறது. அதன் சுவைஇ மணம் உள்ளிட்ட பண்புகளால், பானங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை தயாரிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்களும் பெரிய அளவில் காணப்படுகிறது.
🌿மூக்கடைப்பு ஏற்பட்டால், நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் உடனடியாக மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
🌿ஏலக்காய் கலந்த தேநீர் குடிப்பதால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபடலாம் .
🌿ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்ளும்போது புற்று நோய் செல்கள் உடலில் உருவாவது தடுக்கப்படுகிறது.
🌿இதயத்தில் ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.
🌿ஜீரண பிரச்சனைகளுக்கு, வாய்வு, ஏப்பம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் என சகல உணவுக் குடல் மற்றும் ஜீரண மண்டல கோளாறுகளுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும்.
🌿வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு சில ஏலக்காய்களை தட்டி, அரை டம்ளர் நீரில் கலந்து, கஷாயமாகக் காய்ச்சவும். அதில் சிறிது பனை வெல்லம் போட்டு வெதுவெதுப்பாக குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
🌿3 ஏலக்காயை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, உணவு உண்பதற்கு முன் குடித்தால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.
🌿விக்கல் நிற்காமல் தொடர்ந்துகொண்டிருந்தால், 2 ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலைகளை சிறிது எடுத்து, நீரில் கலந்து காய்ச்சி குடித்தால், விக்கல் நின்று விடும்.
🌿ஆஸ்துமா, சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
🌿தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
🌿நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாகக் காணப்படுகிறது.
🌿 ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களும், பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும் பண்புகளும் உள்ளன. ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், வாய் சுகாதாரம் பேணப்படும். வாய் துர்நாற்றம் மற்றும் கெட்ட சுவாசத்தால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும்.
🌿ஏலக்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டுஇ சருமம் பொலிவு கொண்டதாக மாற்றமடையும்.
🌿ஏலக்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்