எல்ல – வெல்லவாய வீதிக்குப் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, எல்ல – வெல்லவாய வீதியை இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்