எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் உலகப்போர் : அதிர்ச்சி தகவல்!

3ஆம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புகள் உள்ள திகதி குறித்து இந்திய ஜோதிடர் குஷால் குமார் வெளியிட்டுள்ள தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3ஆம் உலகப் போர் பற்றிய கருத்துக்கள் பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

முதல் 2 உலகப் போர்களின் தாக்கங்கள் இன்னும் உலக மக்களின் நினைவில் இருந்து அகலாத நிலையில், 3ஆம் உலகப் போர் குறித்த தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மற்றும் வடமேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் 3ஆம் உலகப் போர் பற்றிய தகவல்கள் அண்மைக் காலமாக அதிகமாக வெளியாகி வருகின்றன.

இந்த வரிசையில் அண்மையில் இந்திய ஜோதிடரான குஷால் குமார் வெளியிட்டுள்ள தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தனது சமூக வலைத்தளத்தில் “3ஆம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.

2024ஆம் ஆண்டு மே மாதம் போர் நிலைமைகள் மிகவும் தீவிரமாக இருக்கும்.

சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், சூழ்நிலைகளை சமாளிக்கச் சிரமங்களை எதிர்நோக்குவர்.

சில அதிகாரிகளின் உடல்நிலை மோசமடையும். இதனால் சிலர் இராஜினாமா செய்யலாம்.

அரசியல் களத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க முடியாது.

3ஆம் உலகப் போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலை, எதிர்வரும் ஜூன் மாதம் 10,18,29 ஆகிய திகதிகளில் ஏற்படக்கூடும்” என ஜோதிடர் குஷால் குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்