‘ஊர் பக்கம் வந்துவிட வேண்டாம்’ – கண்டியில் சுவரொட்டி

‘நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிட வேண்டாம்.’ என கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளையும் வீதியோர சுவர்கள் மற்றும் மதில்களில் ஒட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.