உலங்கு வானூர்தி விபத்து: மூவர் பலி

தெற்கு மெக்சிகோ பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த உலங்கு வானூர்தி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கட்டடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் விமானி மற்றும் இரண்டு பயணிகளே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்