உணவுத் திட்டம் நடைமுறைபடுத்திய பின்னர் மாணவர்களின் வருகை அதிகரிப்பு

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாகவும், உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் முறைமைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான பாராளுமன்ற குழு கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை அரச பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு 2024ஆம் ஆண்டு பதினொரு லட்சத்தில் இருந்து பதினாறு லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், ஒவ்வொரு மாணவருக்கும் ஒதுக்கப்பட்ட 80 ரூபாய் தற்போது 110 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் பாடசாலை உணவுக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், ஆனால் 4 பில்லியன் ரூபா பற்றாக்குறை நிலவுவதாகவும் குறித்த குழு சுட்டிகாட்டியுள்ளது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்