
உணவக ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் கைகலப்பு!
காலியில் உள்ள இந்தியன் உணவகம் ஒன்றின் முகாமையாளர் உட்பட 11 ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் குழு ஒன்றை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி இரவு உணவு வேளையில், வாடிக்கையாளர் குழு ஒன்றுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகப்பாக மாறியது.
இதன்போது, கொழும்பைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உட்பட ஆறு பேர் காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, தாக்குதலில் தொடர்புடைய 11 சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படும்மப்பட்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.