ஈஸ்டர் ஞாயிறன்று உயிர் நீத்தவர்களுக்காக ரி.எம்.வி.பி கட்சியில் இடம்பெற்ற நினைவு அஞ்சலி

ஈஸ்டர் ஞாயிறன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலின் போது உயிர் நீத்த உறவுகளின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 2019 ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் சிறுவர்கள் உட்பட உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி இன்று காலை 9 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது உயிர் நீத்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுகுவர்த்திகளும் ஏற்றி வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24