இளநீர் நன்மைகள் தீமைகள்

இளநீர் நன்மைகள் தீமைகள்

இளநீர் நன்மைகள் தீமைகள்

🟠உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இயற்கை பானங்களில் இளநீரும் ஒன்றாகும். இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் அருந்துகின்றனர். காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. அந்த வகையில் தினமும் இளநீர் அருந்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் தீமைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இளநீர் நன்மைகள்

🌰இதயப் பிரச்சனை, இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகள் பொட்டாசியத்தின் குறைப்பாடால் ஏற்படக் கூடியது. இதைத் தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது.

🌰பெண்களுக்குதான் சிறுநீரகப் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. அவர்கள் இளநீரை எடுத்துக் கொள்வது நல்லது.

🌰குழந்தைகளுக்கு இளநீரைக் கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

🌰அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறுநீர்  பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

🌰முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

🌰கோடை காலங்களில் உடல் சூட்டினினைத் தணிப்பதற்கு இளநீர் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

இளநீர் தீமைகள்

🌰இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என நினைத்து மற்ற பழச்சாறுகளுக்கு மாற்றாக இதை பலரும் குடிக்கின்றனர். ஆனால் ஒரு கப் தேங்காய் நீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவேஇ சர்க்கரை நோயாளிகள் இளநீர் தினமும் குடிப்பதால் சக்கரையின் அளவு அதிகரிக்கும்.

🌰ஆய்வுகளின் படி இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. இது நல்லதாக தோன்றினாலும் இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இதனை குடிக்கும் போதுஇது அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

🌰கர்ப்பிணி பெண்களும்இ தாய்ப்பாலூட்டும் பெண்களும் இளநீர் அதிகமாக குடிப்பது பாதுகாப்பானதல்ல. அதிகளவு இளநீர் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முடிந்தளவு இளநீரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

🌰உணவு ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இளநீர் பலவித பிரச்சினைகளை உண்டாக்கும். இது அழற்சியை ஏற்படுத்தி பலவித நோய்த்தொற்றுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

🌰இளநீர் உங்களுடைய இரத்த அழுத்தத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே அறுவைசிகிச்சையின் போதோ அல்லது அறுவைசிகிச்சைக்கு பிறகோ இளநீர் குடிப்பதை நிறுத்தி வைக்கவும். அறுவைசிகிச்சை முடிவான நாளிற்கு குறைந்தது இரண்டு வாரத்திற்காவது இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

🌰ஒரு டம்ளர் இளநீரில் 46 கலோரிகள் இருக்கிறது. எனவே அதனை வாங்கி நீங்கள் குடிக்கும்போது அது உங்கள் எடையை அதிகரிக்கும்.

🌰ஒரு நாளைக்கு ஒரு இளநீர்தான் அருந்த வேண்டும். அதிகபட்சமாக 250 – 300 ஆடு இளநீர் அருந்தலாம். அதிகமாக அருந்தினால் உடலின் தேவைக்கு மீறிய பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும். பின் அதற்குறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இளநீர் நன்மைகள் தீமைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்