இலவச அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்: மக்கள் விசனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் வண்டியானது பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துக்களின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியகுளம், நட்டாங்கண்டல் மல்லாவி, கோட்டை கட்டிய குளம்,  அம்பலபெருமாள், அம்பகாமம் தட்சடம்பன் ஒலுமடு, இந்துபுரம், வசந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கும் நாளாந்தம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது மூன்று மாதங்களாக இந்த அம்புலன்ஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருவதற்காக 3000 ரூபாய் வரையில் முச்சக்கரவண்டிக்கு செலவழிக்க வேண்டியள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இலவச அம்புலன்ஸ் சேவைகள் மாதக் கணக்காக திருத்த பணிகளில் உள்ளதாகவும் இவற்றை விரைவாக நிறைவு செய்து சேவையில் ஈடுபடுத்தும் வகையில் உரிய தரப்பின் கவனமெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்