இலங்கையில் அதிகரிக்கும் போலி வைத்தியர்கள்: சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம்

நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

போலி வைத்தியர்களில் சிலர் பொதுமக்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போலி வைத்தியர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 1907 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போலி வைத்தியர்களுள் பெரும்பாலானோர் வைத்திய துறை தொடர்பில் எந்தவித முன் அனுபவமும் திறனும் இல்லாதவர்கள் என சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்