இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அண்மையில் இனந்தெரியாத நபரொருவால் ஊடுருவப்பட்டது.

இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குறித்த இணையத்தளம் மீளமைக்கப்பட்டுள்ளதாக நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் இவ்வாறாக இனந்தெரியாத தரப்பினரால் ஊடுருவப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்