இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு , கடந்த செப்டெம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து, 6.243 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் மொத்த ஒதுக்கீடு 6.178 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
இந்த மொத்த ஒதுக்கீட்டில், சீன மக்கள் வங்கியின் நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரும் அடங்குகின்றன.
சீன நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் உள்ள இந்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி, பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஒதுக்குகள் தொடர்ந்து உயர்ந்து வருவது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.