இறுதிப் போட்டி இன்று

இறுதிப் போட்டி இன்று

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி தற்போது இடம்பெறுகின்றது.

நியூஸிலாந்தின் குயீன்ஸ்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி  முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன்போது  பெத்தும் நிசங்க 25 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலும்  குசல் மென்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதேவேளை  குசல் பெரேரா 33 ஓட்டங்களையும், தசுன் சானக்க 15 ஓட்டங்களையும், சரித் அசலங்க 3 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்ஜய டி சில்வா 20 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து அணி ஒரு ஓவர் நிறைவில் விக்கட் இழப்பின்றி 9 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்