இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

⭕இரத்த அழுத்தம் பிரச்சனைகள் இருதய நோயாளிகளுக்கு வரும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.  இவை தமனி  சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் சக்தி அதிகமாக இருக்கும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

⭕Hypertension என்று சொல்லக்கூடிய இந்த உயர் இரத்த அழுத்தம் வராமல் கட்டுப்படுத்த இரத்த அழுத்தத்தை 120/80 என்ற நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் (American Heart Association) கூறுகிறது.

⭕உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் பொழுது ஏற்படும் அறிகுறிகளை பற்றிப் பார்ப்போம்.

🩸உயர் இரத்த அழுத்தத்தின் பொழுது நுரையீரலில் பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற  பிரச்சனைகளால் மூச்சி விடுவதில்  அதிக சிரமம் ஏற்படும். மேலும் இதுபோன்ற நேரங்களில் நடைப்பயிற்சி செய்தாலும், மாடிப்படிகளில் ஏறினாலும் பல விளைவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது. மூச்சி விடுவதில் சிரமங்கள் ஏற்படும் பொழுது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது, இல்லையென்றால் சுயநினைவை இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

🩸உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய மார்பு வலி ஆஞ்சினா என்றும் அழைக்கப்படுகிறது. ஆஞ்சினா என்பது சில நோய்க்கிருமித் தொற்றுகளால் ஏற்படும் மார்பு வலி போன்றது அல்ல. ஆஞ்சினாவை அழுத்துதல், அழுத்தம், கனம், இறுக்கம் அல்லது மார்பில் வலி என சுகாதார நிபுணர்கள் வரையறுக்கின்றனர். இது,ஆஞ்சினா பெக்டோரிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறையும் போது ஆஞ்சினா ஏற்படுகிறது.

🩸உயர் இரத்த அழுத்தம் பார்வை சக்தியைப் பாதிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் காரணமாக, கண்களில் உள்ள இரத்த நாளங்கள் சேதமடைந்து உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியாவிட்டாலும், உங்கள் பார்வையில் மாற்றங்களைக் கண்டால், அதற்குச் சிகிச்சை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

🩸தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் தூக்கத்தின்போது மீண்டும் மீண்டும் நின்று சுவாசிக்கத் தொடங்குவது என்பது ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

🩸உயர் இரத்த அழுத்தத்தின் பொழுது எந்த விதமான அறிகுறிகளை காட்டவில்லை என்றாலும், ஒரு சிலருக்கு மூக்கில் இரத்தத்துடன்  தலைவலிகள்  ஏற்படும்.  இரத்த அழுத்தம் 180 / 120 mm hg அல்லது அதற்கு மேல் அதிகமாக இருந்தால் தலைவலி மற்றும் மூக்கில் இருந்து இரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது. எனவே இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை கேட்பது மிகவும் அவசியம்.

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்