இரண்டு வீடுகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 2 வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரு சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM