இன்று க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த விபத்து

-பதுளை நிருபர்-
லுணுகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்புகையில் மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி 16 வயதுடைய ஹரவாகும்புர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சை முடிந்து வீடு திரும்புவதற்காக  இலங்கை போக்குவரத்து சபைக்கு பிபிலை டிப்போவுக்கு  சொந்தமான பேருந்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் , மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் பேருந்தின் சாரதி   பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்