இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலய மின்வெட்டு

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை யான காலப்பகுதியினுள் மாத் திரம் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என்றும், இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஏ முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.