இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் பதிவானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

ஜாவா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்