
இந்தோனேசியாவில் சிறைச்சாலையில் இருந்து 54 கைதிகள் தப்பியோட்டம்!
இந்தோனேசியாவின் குடேகன் சிறைச்சாலையிலிருந்து 54 கைதிகள் தப்பியோடியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த கைதிகள் கடந்த 10ஆம் திகதி சிறைச்சாலை கதவுகளை உடைத்து தப்பிச்சென்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தப்பியோடிய 21 கைதிகள் சரணடைந்துள்ளதுடன், மேலும் 32 பேர் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் அதிகளவானோர் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைதிகள், சிறைச்சாலையின் பிரதான மற்றும் பின்புற நுழைவாயில்கள் ஊடாகவும், கூரைகளை உடைத்துக்கொண்டும் தப்பிச்சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தப்பிச்சென்றவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை இந்தோனேசிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்