இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற நான்காவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.

179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 17 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்தநிலையில், 5 போட்டிகளைக் கொண்ட தொடர் 2 க்கு 2 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்